Artificial Intelligence Meaning in Tamil
மனிதனின் சிந்திக்க்கும் திறன் என்பது தான் மற்ற உயிர்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு அதுவே மனிதனை உயர்த்தி காட்டுவதும் கூட. ஆனால் மனிதனைப் போல் சிந்திக்கும் ஆற்றல் இன்னொரு உயிர் பெற்றால் எவ்வாறு இருக்கும்? கேட்கவே சிறிது நடுக்கமாக இருக்கிறதல்லவா. அவ்வாறு சிந்திக்கும் ஆற்றல் பெற்ற ஒரு இயந்திரத்தை மனிதனே உருவாக்க பல காலமாக முனைப்பு காட்டி உள்ளான். அதில் சிறிதளவு வெற்றியும் கண்டுள்ளான் என்பதே உண்மை. அவ்வாறு நம்மைப் போலச் சிந்திக்கவும், நாம் பேசுவதை சக மனிதனைப் போல் புரிந்துகொண்டு பதில் அளிக்கவும் மேலும் சில முக்கிய முடிவுகளை தானே சூழ்நிலை கருதி எடுக்கவும் உதவும் தொழில்நுட்பத்தின் பெயர் தான் செயற்கை நுண்ணறிவு. இச்செயற்க்கை நுண்ணறிவைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
மேற்கூறியப்படி செயற்கை நுண்ணறிவு இயங்குவதற்கு இயந்திரத்திற்கு நாம் அளிக்கும் வழிமுறையே (Algorithm ) காரணமாக விளங்குகிறது. அவற்றில் சில வழிமுறைகள் இயந்திர வழி கற்றல் (machine learning), ஆழ்ந்த கற்றல் (deep learning), இயற்கை மொழி செயலாக்கம் (natural language processing) மற்றும் ரோபாட்டிக்ஸ் (robotics) ஆகும். இவற்றின் துணை கொண்டே ஒரு இயந்திரம் தரவுகளை பகுப்பாய்வு செய்யவும், இயற்க்கை வடிவங்களை அடையாளங் காணவும் மேலும் தகுந்த முடிவுகளை எடுக்கவும் முடிகிறது.
செயற்கை நுண்ணறிவின் வகைகள்:
செயற்கை நுண்ணறிவு இரண்டு முக்கிய வகைப்படும் அவை குறுகிய அல்லது பலவீனமான செயற்கை நுண்ணறிவு (Narrow or Weak AI ) மற்றும் பொது அல்லது வலுவான செயற்கை நுண்ணறிவு (General or Strong AI).
குறுகிய அல்லது பலவீனமான செயற்கை நுண்ணறிவு (Narrow or Weak AI ):
இந்த வகையான செயற்கை நுண்ணறிவு ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்ய மட்டும் உருவாக்கப்பட்டது அதைத் தவிர வேறு எந்த வேலையும் அந்த இயந்திரத்தால் செய்ய முடியாது. உதாரணமாக தானியங்கி மகிழூந்துகள் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள் அந்த தானே ஓடுவதற்கு அதற்காகவே செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவே காரணம் ஆனால் அதைத் தவிர வேறு எந்த வேலையும் அந்த செயற்கை நுண்ணறிவால் செய்ய இயலாது.
பொது அல்லது வலுவான செயற்கை நுண்ணறிவு (General or Strong AI)
நாம் முன்பு பார்த்ததைப் போல மனிதனைப் போல அனைத்தும் செய்ய கூடிய செயற்கை நுண்ணறிவு தான் வலுவான நுண்ணறிவு. இவாறான நுண்ணறிவு இன்னும் இந்த உலகில் இல்லை, தத்துவார்த்த அடிப்படையில் தான் இன்னும் உள்ளது.
செயற்கை நுண்ணறிவு எவ்வாறு இயங்குகிறது
முதலில் செயற்கை நுண்ணறிவிற்கு அடிப்படை மிகப்பெரிய அளவில் தடவல்களை இயந்திரத்திற்கு கொடுக்க வேண்டும் பின்னர் மேற்கூறிய வழிமுறைகளை பயன்படுத்தி அதை பகுப்பாய்வு செய்ய வேண்டும். இன்னும் விரிவாக அவ்வழிமுறைகளைப் பற்றி பாப்போம் வாருங்கள்.
இயந்திர வழி கற்றல் (machine learning)
இயந்திர வழி கற்றல் என்பது பெரும் அளவில் தகவல்களை இயந்திரத்திற்கு செலுத்தி அதில் இருந்து சில கேள்விகளை இயந்திரத்திடம் எழுப்பி அதன் பதில் அந்த தகவல்களை பகுப்பாய்வு செய்து ஒரு வழிமுறை (algorithm) வழியாக சரியாக வருகிறதா என்று பார்ப்பது. இவ்வாறு பல வழிமுறைகள் இருக்கிறது அதை வைத்து இயந்திரம் தகவலை சிறப்பாக பகுப்பாய்வு செய்து அதுவே தகுந்த பதிலையும் முடிவுகளையும் எடுக்கச் செய்வதே ஆகும்.
ஆழ்ந்த கற்றல் (deep learning)
ஆழ்ந்த கற்றலும் இயந்திர வழி கற்றல் போல தான் கூடுதலாக இதில் தகவலை பகுப்பாய்வு செய்வதற்கு நரம்பு வலையமைப்பு (neural network) தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது தான். நரம்பு வலையமைப்பு என்பது நமது மூளை அமைப்பைப் போன்று பல அடுக்குகள் கொண்டு ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு தகவலை நன்றாக படுபாய்வு செய்ய உதவும். நாம் சிந்திக்கும் போது ஒரு தகவலை நமக்கு தெரிந்த பல செய்திகளைக் கொண்டு தொடர்பு படுத்தி பார்க்கிறோம் அல்லவா அதே போல் இயந்திரமும் நரம்பு வலையமைப்பு துணைக் கொண்டு செய்யமுடியும்.
இயற்கை மொழி செயலாக்கம்
இயற்க்கை மொழி செயலாக்கம் என்ற பெயரிலிருந்தே உங்களுக்கு புரிந்திருக்கும். இயந்திரம் நம் மொழியைக் கற்று, புரிந்துக்கொண்டு அதற்கு பதில் அளிப்பதுதான். இதற்காக இயந்திரத்திற்கு நம் மொழியின் உரையையோ அல்லது பேச்சுக்களையோ கொடுத்து பயிற்றுவிக்க வேண்டும்.
ரோபாட்டிக்ஸ் (robotics)
ரோபோடிக்ஸ் என்பது நீங்கள் பலத் திரைப்படங்களில் பார்ப்பதுப் போல இயந்திரம் கை கால்கள் போன்ற செயற்கை உறுப்புகளைக் கொண்டு அதற்கும் சில வழிமுறைகளின்(algorithm) துணைக் கொண்டு உலகத்தில் நடமாடவும், பொருட்களை அறியவும் உதவுவது.
செயற்கை நுண்ணறிவின் நன்மைகள்
நீங்கள் நினைத்துபார்க்க முடியாத அளவு இப்பொழுதே செயற்கை நுண்ணறிவு நம் வாழ்வின் ஓர் அங்கமாக கலந்து விட்டது. சுகாதாரம், நிதி, கல்வி மற்றும் பொழுதுபோக்கு போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவு ஊடுருவி விட்டது அதில் சிலவற்றை விரிவாகப் பார்ப்போம்.
மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளைத் தன்னியக்கமாக்குதல்
செயற்கை நுண்ணறிவின் இன் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று, மீண்டும் மீண்டும் நிகழும் மற்றும் நேரத்தைச் செலவழிக்கும் பணிகளைத் தானியக்கமாக்கும் திறன் ஆகும். இது மனிதத் தொழிலாளர்களின் சிக்கலான வேலைகளை சுலபமாக்கி படைப்புத் திறனை மேம்படுத்துகிறது.
செறிவூட்டப்பட்ட முடிவெடுக்கும் திறன்
இயந்திரம் மனிதனை விட பன்மடங்கு தகவல்களை பகுப்பாய்வு செய்து பயனாளர்களின் இயல்பயும் விருப்பங்களையும் கண்டறிய முடியும். இதன் மூலம் ஒரு நிறுவனம் அவர்களின் பயனாளர்களை முழுவதுமாக அறிந்து அவர்களுக்கு ஏற்றாற்போல் சேவையைக் கொடுக்க முடியும்.
அதிகரித்த செயல்திறன் மற்றும் துல்லியம்
செயற்கை நுண்ணறிவு பெற்ற இயந்திரத்தின் நிலைத்தன்மையும், துல்லியத்தின் அளவும் மிகவும் அதிகப்படியாகவும் இருக்கும். இது உற்பத்தித் திறன் மற்றும் தேவையற்ற செலவீனங்களையும் குறைத்து உற்பத்தியை அதிகரிக்கும்.
மேம்படுத்தப்பட்டப் பாதுகாப்பு
இணைய வழித் தாக்குதல்களையும், இயற்க்கைப் பேரழிகளில் இருந்தும் செயற்கை நுண்ணறிவு மூலம் அறிந்து தடுக்க இயலும். இதன் மூலம் விபத்துகளை தடுக்கவும், பல உயிர்களைக் காப்பாற்றவும் இயலும்.
மேம்படுத்தப்பட்ட ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்
நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியவும், தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைத் திட்டங்கள் அளிக்கவும் மேலும் புதிய புதிய மருந்துகளை கண்டறியவும் செயற்கை நுண்ணறிவு பெரும் உறுதுணையாக இருக்கும். இதனால் பல உயிர்களை சுலபமாக காப்பாற்றவும் மருத்துவ செலவுகளை குறைக்கவும் முடியும்.
கல்வியை மேம்படுத்துதல்
கல்வி பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக செயற்கை நுண்ணறிவு இருக்கும்.ஒவ்வொரு மாணவர்களுக்கும் தகுந்தபடி சொல்லிக்கொடுக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும் முடியும். ஒரு மாணவனின் முழு திறமையை அவனை தனிப்பட்ட முறையில் அறிந்து அதற்கு ஏற்றாற்போல் அவனை மேம்படுத்த இயலும்.
இதன் மூலமாக நாம் அறிவது, செயற்கை நுண்ணறிவு நம் அன்றாட வாழ்வில் பற்பல பயன்களை உடையது. நமது வாழ்வியலை மிகவும் சுலபமாகவும், தினமும் செய்யும் வேலைகளை மிகவும் துல்லியமாகவும், தகுந்த முடிவுகளை மேற்கொள்வதற்கும் செயற்கை நுண்ணறிவு பயன்படும்.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள்
செயற்கை நுண்ணறிவு இன்றைய உலகில் பற்பல தொழில்களில் பெரிய வகையில் பயன்படுகிறது, அவற்றில் சில,
- உடல்நலம் மற்றும் சுகாதாரத்துறை: நோயாளிகளின் உடல்நிலையை துல்லியமாகக் கண்டறியவும், ஒவ்வொரு நோயாளிக்கும் அவரவர்களுக்குத் தகுந்த தனிப்பட்ட சிகிச்சை திட்டங்கள் வழங்க மட்டுமல்லாது புதிய புதிய மருந்துகளை விரைவில் கண்டறியவும் பெரிய அளவில் உதவுகிறது.
- பொருளாதாரத்துறை: இத்துறையில் மிக முக்கியமாக மோசடிகளை கண்டறியவும், முதலீடு முடிவுகளை மேற்கொள்வதற்கும், ஒவ்வொருவருக்கும் தகுந்தவாறு தனிப்பட்ட வகையில் பொருளாதார ஆலோசனைகளை வழங்கவும் செயற்கை நுண்ணறிவு பெரும் உதவி புரிகின்றது.
- உற்பத்தி: உற்பத்தித்துறையில் உற்பத்தித்திறன் அதிகரிக்கவும், கழிவுகளை குறைக்கவும் (மனித முயற்சியில் துல்லியமாக வெட்டவோ, அறுக்கவோ இயலாது அதனால் கழிவுகள் அதிகரிக்கும்), விநியோகச் சங்கிலியை மேம்படுத்தவும் உதவுகின்றது).
- சில்லறை விற்பனை: ஒவ்வொரு வாடிக்கையாளர்ககளுக்கும் தனிப்பட்ட முறையில் அவர்களுக்குத் தேவையான பொருட்களை மட்டும் காட்ட முடியும் (நீங்களே amazon போன்ற மின்வணிகத் தளத்தில் பார்த்திருப்பீர்கள்), மேலும் அன்றாடம் மாறும் விலைகளைத் துல்லியமாக கணிக்க இயலும் மற்றும் சரக்கு மேலாண்மை மேம்படுத்த உதவும்.
- பொழுபோக்குத் துறை: ஒவ்வொரு பயனாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் உள்ளடக்கத்தை அவர்களுக்கு ஏற்றாற்போல் காட்ட இயலும்.
செயற்கை நுண்ணறிவின் சில உதாரணங்கள்
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு பரந்த பொருள் கொண்டச்சொல், அவற்றால் விளைத்த நன்மைகளின் சில
தனி (குரல்) உதவியாளர்:
இன்றைக்கு நம் அன்றாட வாழ்வில் புழக்கத்தில் இருக்கக்கூடிய ஆப்பிள் சிறி (Apple’s Siri), அமேசான் அலெக்சா (Amazon’s alexa), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) போன்ற குரல் உதவி புரியும் மென்பொருள், இயற்க்கை மொழி செயலாக்கம் (natural language processing – NLP) மற்றும் இயந்திர வழி கற்றலை நாம் பேசும் மொழியைப் புரிந்து பதிலளிக்கப் பயன்படுத்துகின்றது.
புகைப்படம் மற்றும் காணொளிப் புரிதல்:
ஒருப் புகைப்படத்தைப் புரிந்துக் கொள்ளவும் அல்லது ஒரு காணொளியைப் புரிந்து அதில் இருக்கும் பொருட்களை அடையாளங்கொள்ளவும் உதவுகிறது. இதன் மூலம் ஒரு புகைப்படம் அல்லது காணொளியில் காட்டப்படும் நபர் யாரென்று அடையாளம் கண்டறிய இயலும். இந்தத் தொழில்நுட்பத்தினால் தான் முக அங்கீகாரம் சாத்தியமானது மேலும் எதிர்காலத்தில் தானியங்கி மேகிழூந்துகள் நமது பயப்பாட்டுக்கு வரவிருக்கின்றது.
மோசடிக் கண்டறிதல்
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வர்த்தகத் திருட்டையும், பணப் பரிவர்த்தனையில் போது ஏற்படும் முரண்பாடுகளையும் எளிதில் கண்டறிய முடியும். இந்தத் தொழில்நுட்பம் கடன் அட்டை பயன்படுத்தும் போது நிகழும் திருட்டையும், காப்பீடு கோரிக்கைகளை சரி பார்க்கவும் உதவும்.
மருத்துவ சாதனத்தில் செயற்கை நுண்ணறிவு
ஒரு நோயை அதன் அறிகுறியிலிருந்து மிகவும் எளிதாக முன்னமே நிச்சயிக்க செயற்கை நுண்ணறிவு பெரும் உதவிப் புரிகின்றது. முன்னர் கண்டதுப் போல ஒரு புகைப்பத்தில் உள்ள பொருட்களை நம்மால் செயற்கை நுண்ணறிவின் துணைக்கொண்டு எளிதில் கண்டறிய முடியும், அதைப் பயன்படுத்தி நம்மால் ஊடு கதிர் (X-Ray) படங்களை செய்யற்க்கை நுண்ணறிவு பொருத்திய கருவியின் உதவியால் எளிதில் நோய் இதுவென்று உறுதிப்பட கண்டறிய முடியும்.
அரட்டை இயலி (Chat Bot)
ஒரு மனிதனிடம் தட்டச்சு செய்து அரட்டை அடிப்பது போலவே ஒரு செயற்கை நுண்ணறிவு பெற்ற இயந்திரத்திடம் நீங்கள் அரட்டை அடிக்கலாம். நீங்கள் வினவும் கேள்விகளுக்கு தகுந்த பதில்களை அதன் நுண்ணறிவைக் கொண்டு புரிந்து பதில் அளிக்கும். உங்கள் வாடியாளர்களுக்கு 24/7 உதவிப் புரிய முடியும், இதனால் உங்கள் தொழில் மேலும் உயர பல வாய்ப்புகள் உள்ளன.
பரிந்துரை அமைப்புகள்
Amazon, Netflix போன்ற பெரிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் தகுந்த பரிந்துரைகளை காட்டுவதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு பெற்ற பரிந்துரை அமைப்புக்களைப் பயன்படுத்துகிறார்கள் வாடிக்கையாளர்களின் முந்தைய செயல்பாடுகளைக்கொண்டு அவர்களுக்குத் தகுந்த பரிந்துரைகளை சுலபமாகக் கொடுக்க இயலும்.
கணினி விளையாட்டு
கணினி விளையாட்டில் நாம் விளையாடும் கதாப்பாத்திரத்தை சுற்றி இருக்கும் கதாபாத்திரங்கள் நம்மைப் புரிந்துக் கொண்டு செயல் படும் இதன் மூலம் ஒவ்வொருவருக்கு தகுந்தாற்போல் அந்த விளையாட்டு ஆர்வமுள்ளதாக அமையும்.
இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே இன்னும் பல செயல்பாடுகள் செயற்கை நுண்ணறிவு மூலம் நாம் காணப்போகின்றோம் வரும் காலங்களில்.
உங்கள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கு சில குறிப்புகள்
நீங்கள் உங்கள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த விரும்பினால் அதற்கான சில செயற்படுத்தக்கூடிய குறிப்புகள்.
- உங்கள் தொழில் தேவைகளைக் கண்டறியுங்கள்: நீங்கள் செயற்கை நுண்ணறிவை செயல் படுத்துவதற்கு முன்னாள் உங்கள் தொழிலில் எந்த எந்த இடத்தையெல்லாம் தானியங்கியாகவோ அல்லது இன்னும் துல்லியமாக செய்ய முடியும் என்று அறிந்து கொள்ளுங்கள்.
- சரியான செயற்கை நுண்ணறிவு கருவிகளை கண்டறிதல்: இணையதளத்தில் நிறைய செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் தளங்கள் உள்ளன. அவற்றில் எவையெல்லாம் உங்கள் தொழிலுக்கும், உங்கள் பயன்பாட்டிற்கு எளிமையாகவும் மேலும் அவர்கள் எவ்வளவு பணம் சந்தாவாக கேட்கிறார்கள் என்றறிந்து தேர்ந்தெடுங்கள்.
- தரவுகளின் தரத்தில் கவனமாக இருங்கள்: செயற்கை நுண்ணறிவு நீங்கள் முதலில் கொடுக்கும் தரவுகளின் அடிப்படையில் தான் இயங்கும். அதனால் உங்களிடம் சுத்தமான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நம்பகமான தரவுத் தொகுப்பு இருக்கிறதா என்று சரிப்பார்த்துக்கொண்டு அதைத் திரட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
- நெறிகளையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்துங்கள்: செயற்கை நுண்ணறிவு சில கடினமான மற்றும் எளிதில் புரிந்துக்கொள்ள முடியாத வழிமுறைகளைப் பயன்படுத்தி சிக்கலான முடிவுகளை மேற்கொள்ளும் அதனால் எவ்வாறு அதனால் அந்த முடிவுகள் வெளிப்படையாக இருத்தல் வேண்டும்.
- பயிற்சி மற்றும் கல்வியில் முதலீடு செய்யுங்கள்: செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு அதற்கு தகுந்த அறிவு வேண்டும் அதனால் உங்கள் தொழிலார்களுக்கு தகுந்த பயிற்சி கொடுத்து கற்றுக்கொடுக்க வேண்டும்.
- சிறிது சிறிதாக தொடங்கி அதையே வாடிக்கையாக்குங்கள்: செயற்கை நுண்ணறிவு உங்கள் தொழிலில் முதலில் பயன்படுத்துவது சிறிது சிக்கலாகவும் நேரம் எடுக்கும் வழிமுறையாகவும் இருக்கும் அதனால் உங்கள் தொழிலில் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துங்கள், பிறகு அதைப்போலவே மற்ற இடங்களிலும் உங்களால் எளிதாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த இயலும்.
சமூகத்தில் AI’ன் தாக்கம்
பழத்தோல்ழிகளிலும் அதன் முன்னேற்றத்திற்கும் செயற்கை நுண்ணறிவு தவிர்க்க முடியா இடத்தைப் பிடித்து விட்டது. இதனால் நம் சமூகத்தில் நிகழும் விளைவுகளையும் நாம் சந்திக்க நேரிடும்.
வேலைவாய்ப்பு:
மிகவும் முக்கியமான சமூக மாற்றம் என்பது இந்த செயற்கை நுண்ணறிவினால் நிகழவிருக்கும் வேலையிழப்புகள். ஏனென்றால் மனிதனின் முயற்சியினால் நிகழ்ந்துக்கொண்டிருங்க வேலைக்களை அதைவிட வேகமாகவும் துல்லியமாகவும் இயந்திரம் செய்து முடிக்கக்கூடும். இருப்பினும் செயற்கை நுண்ணறிவு செய்யும் துறையில் அதை கற்று ஆராய்ந்து மேம்படுத்தும் இடத்தில பல வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகும்.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு:
செயற்கை நுண்ணறிவு ஒருவரைப் பற்றி முழுத்தகவலைத் தெரிந்துக் கொண்டால்தான் மேற்கூறிய தனிப்பட்ட பரிந்துரைகள் போன்ற பணிகளை செய்ய முடியும். அதனால் ஒருவரைப் பற்றி முழுத் தகவலை அதற்கு கொடுக்க அந்த மனிதரின் அனுமதியின்றியே அவரைப்பற்றி தகவல் எடுக்கக் கூடும். இதனால் நம் தனியுரிமை பறிபோகலாம்.
சார்பு மற்றும் பாகுபாடு:
செயற்கை நுண்ணறிவு அதற்கு கொடுக்கும் முதல் தகவலைக் கொண்டு தான் முடிவுகளை மேற்கொள்ளும். கொடுக்கும் தகவலையே ஒருவருக்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ சார்பாகக் கொடுத்து விட்டால் அதன் முடிவுகள் மேலும் ஒரு சார்பாக இருக்கக்கூடும் இதனால் மேலும் சமூகப் பிரிவுகள் நிகழலாம். இதனால் தான் வெளிப்படைத் தன்மை அவசியமாகிறது.
நெறிமுறை சிக்கல்கள்:
AI மிகவும் மேம்பட்டதாக இருப்பதால், அதன் பயன்பாட்டின் நெறிமுறைத் தாக்கங்கள் பற்றிய கவலைகள் உள்ளன. உதாரணமாக, இயந்திரங்கள் வாழ்க்கை மற்றும் இறப்பு முடிவுகளை எடுக்க அனுமதிக்கப்பட வேண்டுமா? AI நெறிமுறையுடனும், பொறுப்புடனும் பயன்படுத்தப்படுவதை நாம் எப்படி உறுதி செய்வது?
செயற்கை நுண்ணறிவு நம் வாழ்வில் அனைத்து விதமாகக் கலந்து அதை மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றது. அதனால் நாம் அதன் மேற்கூறிய அனைத்து சமூக விளைவுகளை அறிந்து அவற்றை அனைத்து வகையிலும் சரி செய்து அனைவருக்கும் பயனுள்ளதாகச் செய்வது நம் கடமை.